சவூதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணி

 

nurse

சவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு பிஎஸ்சி, எம்எஸ்சி முடித்த பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: சவூதி அரேபிய சுகாதார அமைச்சக அரசு மருத்துவமனை

பணி: செவிலியர்

தகுதி: 10, 12ஆம் வகுப்பில் 70 சதவிகித மதிப்பெண்கள் மற்றும் செவிலியர் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஎஸ்சி, எம்எஸ்சி பட்டம் பெற்று அதே துறையில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

புதுடில்லியில் 17.10.2015 முதல் 19.10.2015 வரையிலும், ஹைதராபாத்தில் 21.10.2015 – 22.10.2015 ஆகிய நாட்களிலும், பெங்களூருவில் 24.10.2015 – 27.10.2015 வரையிலும் நடைபெறுகிறது.

சம்பளம்: 2 வருட பணி அனுபவமுள்ள பிஎஸ்சி செவிலியர்களுக்கு ரூ.75,000,  எம்எஸ்சி செவிலியர்களுக்கு ரூ.1,00,000 வழங்கப்படும்.

மேலும், இலவச விமான டிக்கெட், தங்குமிடம், இலவச போக்குவரத்து வசதி, வருடத்திற்கு 30-45 நாட்கள் விடுப்புடன் கூடிய முன்பண சம்பளம் மற்றும் பிற சலுகைகள் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றுடன் ஒரு புகைப்படத்தை தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் ovemclsn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 20.10.2015க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்கள் அறிய 044-22502267/22505886/08220634389 என்ற தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள் மூலமாகவும் அல்லது www.omcmanpower.com என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply