சவுதி அரேபிய இளவரசரின் பருந்துகளுக்காக ஒரு ஸ்பெஷல் விமானம்
இதுவரை மனிதர்களின் பயணத்திற்காகவே பயன்படுத்தப்பட்டு வந்த விமானங்கள் முதல்முறையாக பருந்துகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆம் சவுதி அரேபியா இளவரசரின் 80 பருந்துகள் விமானம் மூலம் நேற்று பறந்தன.
ஐக்கிய அரபு நாடுகளின் தேசிய பறவையான பருந்துகள் விமானத்தில் பயணம் செய்யும் வகையில் அவைகளுக்கு பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டன.
இதனால் இந்த பருந்துகள் பக்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, பாகிஸ்தான், மொராக்கோ மற்றும் சிரியாவுக்கு விமானத்தில் பயணம் செய்ய முடியும்.
அந்த வகையில் சவுதி அரேபியா இளவரசரின் 80 பருந்துகள் விமான பயணிகளுடன் நேற்று விமானத்தில் பயணம் செய்தன. மேலும் பாதுகாப்பு கருதி பருந்துகளின் கண்கள் கட்டப்பட்டதோடு, அவைகள் இருக்கைகளின் கீழ் பகுதியில் கட்டப்பட்டிருந்தன.
இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ:
https://www.youtube.com/watch?v=LdiKAt4dHd8