சூரியனை மையமாக கொண்டு பூமி மட்டுமின்றி அனைத்து கிரகங்களும் சுற்றுகிறது என்றுதான் நாம் பாடங்களில் படித்துள்ளோம். இது விஞ்ஞானபூர்வமாகவும் விஞ்ஞானிகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் இந்த கருத்தை ஏற்றுக்கொண்ட நிலையில் திடீரென சவுதி அரேபியாவை சேர்ந்த மதகுரு ஒருவர் இந்த கருத்து உண்மையல்ல என்றும் பூமி சூரியனை சுற்றவில்லை என்றும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1JoWSa5″ standard=”http://www.youtube.com/v/I5Te6JNMqW8?fs=1″ vars=”ytid=I5Te6JNMqW8&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep4305″ /]இந்த மதகுருவின் பெயர் ஷேக் பந்தர் அல்–ஹைபாரி. இவரிடம் சமீபத்தில் சவுதி அரேபிய மாணவர்கள் கலந்துரையாடியபோது இதுகுறித்து மாணவர் ஒருவர் கேட்ட கேள்விக்கு மதகுரு இந்த முரண்பாடான பதிலை கூறியுள்ளார். பூமி சுற்றவில்லை என்றும் அது ஆடாமல் அசையாமல் ஓரிடத்தில் அப்படியே நிற்கிறது என்று எடுத்துக்காட்டுடன் தெரிவித்தார்.
தண்ணீர் நிரப்பப்பட்டு மூடப்பட்ட கப் ஒன்றை கையில் அவர் பிடித்துக் கொண்டார். பின்னர் நாம் அனைவரும் சார்ஜாவில் இருந்து விமானம் மூலம் சீனா செல்வதாக வைத்து கொள்வோம். அப்போது நடுவானில் விமானம் நிறுத்தப்பட்டால் சீனா தானாகவே நம்மை நோக்கி வர வேண்டும். எதிர் திசையில் பூமி சுழல்வதாக இருந்தால் விமானம் சீனாவை சென்றடைய முடியாது. ஏனென்றால் சீனாவும் சுழல்கிறதே என்றார்.
இந்த வீடியோ ஒரு டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது. மதகுருவின் இந்த அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.