அரசு ஊழியர்களுக்கு 2 மாத போனஸ். சவுதி அரேபியா புதிய மன்னர் அதிரடி.

saudi arabiaசவுதி அரேபிய மன்னர் சமீபத்தில் மரணம் அடைந்ததை அடுத்து அவருடை மகன் சல்மான் புதிய மன்னராக சமீபத்தில் பதவியேற்றார். அந்நாட்டு வழக்கப்படி புதிய மன்னர் பதவியேற்றவுடன் பொதுமக்களுக்கு ஏதாவது ஒரு புதிய சலுகை அறிவிப்பு வெளியிடுவது வழக்கம். இதன்படி மன்னர் சல்மான், அரசு பணியாளர்கள் மற்றும் அரசு உதவி பெற்று படிக்கும் மாணவ மாணவியருக்கு 2 மாத போனஸ் வழங்குமாறு உத்தரவிட்டார். இந்த உத்தரவு காரணமாக அரசு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திடீரென இரண்டு மாத போனஸ் கிடைத்துள்ளதால் திக்குமுக்காடிய அந்நாட்டு அரசு ஊழியர்கள், தற்போது தங்கம் விலை மிகவும் சரிந்துள்ளதால் தங்கமாக வாங்கி குவிப்பதாகவும், இதன் காரணமாக சவுதி அரேபியாவின் நகைக்கடைகளில் அதிக கூட்டம் குவிந்து வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.

வைர நகைகள், வைரக்கற்கள் பதிக்கப்பட்ட ‘ரோலெக்ஸ்’ கைக்கடிகாரங்கள், நெக்லஸ்கள், டிசைன் டிசைனான கை வளையல்கள் என வழக்கத்தைவிட வியாபாரம் மும்மடங்கு அதிகரித்துள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் விற்பனை மேலும் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply