ஏமனில் உள்நாட்டு போர் தீவிரம். நிலைமையை கட்டுப்படுத்த படைகளை அனுப்பிய சவுதி அரேபியா.

Yemen Context Mapஏமன் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக அந்நாட்டின் அதிபர் தலைமறைவாக உள்ளார். மேலும் ராணுவ அமைச்சரும் போராட்டக்காரர்களால் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் சவுதி அரேபியா உள்பட அரபுநாடுகள் ஏமன் நாட்டிற்கு தங்களது படைகளை அனுப்பி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகின்றன.

ஏமன் தலைநகர் சனாவை கிளர்ச்சியாளர்கள் முழுவதுமாக தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். அதிபர் மாளிகையை இரண்டாவது முறையாக அவர்கள் நெருங்கிய நிலையில், மாளிகையிலிருந்து அதிபர் மன்சூர் ஹதி நேற்று முன் வெளியேறினார்.

மேலும் துறைமுக நகரான ஏடெனிலிருந்து இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள விமானப்படை தளத்தையும் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதாக வந்த தகவல் அடுத்து, அந்நாட்டில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அண்டை நாடான சவுதி அரேபியா ஏமனில் 100 போர் விமானங்கள் மூலம் வான் வழித் தாக்குதலை தொடங்கியுள்ளது. சுமார் 150,000 ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாக அல்-அரேபியா செய்தித் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. மேலும் சில அரபுநாடுகளும் ஏமன் நாட்டிற்கு தங்கள் படையை அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

Leave a Reply