31 காசு விவகாரத்தை முடித்து வைத்த எஸ்பிஐ வங்கி!
விவசாயி ஒருவர் வாங்கிய கடனில் 31 காசு பாக்கி இருந்ததால் பத்திரங்களை தர முடியாது என்று கூறிய எஸ்பிஐ வங்கிக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது 31 காசுகளை தள்ளுபடி செய்துவிட்டு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட விவசாயிக்கு அவருடைய பத்திரங்களை எஸ்பிஐ வங்கி அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
50 காசுக்கு கீழே இருந்தால் அந்த தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற விதி இருக்கும் நிலையில் விவசாயியை அலைக்கழித்தது மிகப்பெரிய தவறு என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது