விஜய் மல்லையாவின் மும்பை பங்களா இன்று ஏலம். ரூ.150 கோடி போகுமா?
கிங் பிஷர் ஏர்லைன்ஸ் உள்பட விஜய் மல்லையா தான் நடத்தி வந்த பல்வேறு நிறுவனங்களுக்காக ரூ.9000 கோடி வரை ஸ்டேட் வங்கி உள்பட பல வங்கிகளில் கடன் பெற்றிருந்தார்.
ஆனால் எந்த கடனையும் கட்டாமல் அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டதாக கூறப்படும் நிலையில் வங்கிக்கடனுக்காக இன்று அவருடைய மும்பை கிங்பிஷர் பங்களா ஏலம் விடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையின் பிரதான இடத்தில் இருக்கும் இந்த பங்களாவின் ஆரம்ப ஏலத்தொகை ரூ.150 கோடி என்றும், ஏலம் எடுக்க முன்வருபவர்கள் ரூ.15 லட்சம் முன்பணம் கட்ட வேண்டும் என்றும் அறிவிக்கபப்ட்டுள்ளது. இணையதளம் மூலம் நடைபெறும் இந்த ஏலத்தில் யார் அதிக தொகைக்கு கேட்கின்றார்களோ அவர்களுக்கு பங்களா கிடைக்கும்.
இந்த ஏலத்தில் கலந்து கொள்ள பல முன்னணி தொழிலதிபர்கள் முன்வந்துள்ளதாகவும், இந்த பங்களாவை கைப்பற்ற கடும்போட்டி இருப்பதால் அதிகமான தொகைக்கு இந்த பங்களா ஏலத்திற்கு போகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கிங்பிஷர் நிறுவனத்திற்காக்க மட்டுமே அவர் ரூ.1600 கோடி கடன் வாங்கியுள்ளதால் இந்த 150 கோடி ரூபாய் என்பது ஒரு சிறுதுளிதான் என்பது குறிப்பிடத்தக்கது.