தமிழகத்திற்கு 4 டி.எம்.சி தண்ணீர் வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு, வழங்க முடியாது என சித்தராமையா திட்டவட்டம்
காவிரி வழக்கு மீண்டும் வரும் செவ்வாய்க்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு இந்த மாதம் காவிரியில் 4 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என்றால் கடும் விளைவுகளை கர்நாடக அரசு சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் சுப்ரீம் கோர்ட் எச்சரித்தது
ஆனால் காவிரியில் தண்ணீரை திறந்துவிடும் அளவுக்கு போதிய நீர் இல்லை என்றும், இதனால் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி தண்ணீர் திறந்து விடமுடியாது என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே மீண்டும் இந்த வழக்கின் விசாரணை வரும் 8ஆம் தேதி வரும்போது கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனங்களை தெரிவித்து அதிரடி உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது