சிவாஜி சிலை விவகாரம்: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவு
சென்னை கடற்கரை சாலையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்றுவதற்கு தமிழக அரசு கேட்ட இரண்டு ஆண்டுகள் காலம் அவகாசத்தை அளிக்க டெல்லி சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. சிலை அகற்றுவது குறித்து ஒருவாரத்தில் முடிவெடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சிவாஜி கணேசனின் சிலையை அகற்றக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த நீதிபதிகள், சிவாஜி சிலையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது. சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சமீபத்தில் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவில் விரைவில் சிவாஜிக்கு கட்டப்படவுள்ள மணிமண்டபத்தில், அகற்றப்படவுள்ள சிவாஜி சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் இந்த சிலையை அகற்ற 2 ஆண்டுகள் கால அவகாசம் அளிக்குமாறும் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு கேட்ட இரண்டு ஆண்டுகள் அவகாசத்தை அளிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி மறுத்ததோடு, சிவாஜி சிலை எப்போது அகற்றப்படும் என்பதை இன்னும் ஒரு வாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.