காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் இந்தியா முழுவதிலும் படுதோல்வி அடைந்து வெறும் 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற 55 தொகுதிகள் தேவை. ஆனால் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கவேண்டும் என அக்கட்சி சுப்ரீம்கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நாடாளுமன்ற விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என கூறி நீதிபதி இந்த வழக்கை தள்ளுபடி செய்தார். இதனால் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி கிடைக்கும் வாய்ப்பு மங்கிப்போனது.,
முன்னதாக இந்த வழக்கில் வாதாடிய அட்டனர்னி ஜெனரல் முகுல் ரொஹாத்கி ‘காங்கிரஸ் கட்சி எதிர்கட்சி அந்தஸ்து கோர எந்த முகாந்தரமும் இல்லை. மக்களவை வரலாற்றில் இது போன்றதொரு நிகழ்வு இதற்கு முன் நடந்திருக்கவில்லை. அதனால், காங்கிரஸ் அப்படி ஒரு நிகழ்வை சுட்டிக்காட்டி தங்களுக்கும் அதன் அடிப்படையில் எதிர்கட்சி அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரவும் வழிவகை இல்லை’ என்று கூறியிருந்தார்.
Chennai Today News: SC rejects plea seeking ‘Leader of Opposition’ status in Parliament