10 மாத குழந்தை உள்பட 7 பேரை கொலை செய்த காதல் ஜோடிக்கு தூக்கு தண்டனை.

supreme courtஉத்தரபிரதேச மாநிலத்தில் தங்கள் காதலுக்கு இடையூறாக இருந்ததாக சொந்த குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள் 7 பேர்களை ஈவு இரக்கமின்றி கொலை செய்த காதல் ஜோடி ஒன்றுக்கு தூக்கு தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த் மொரதாபாத் அருகில் உள்ள பாபன் கேரா என்ற கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியை ஷபனம். இவரும் சலீம் என்பவரும் உயிருக்குயிராக காதலித்து வந்தனர். இருவரும்  நெருங்கிப் பழகியதில் ஷபனம் கர்ப்பம் ஆனார். சலீமுடன் பழகுவதை ஷபனம் குடும்பத்தினர் கண்டித்தனர். இனிமேல் சலீமை பார்க்க கூடாது என ஷபனத்தை எச்சரிக்கை செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஷபனம், சம்பவத்தன்று இரவு டீயில் மயக்க மருந்து கலந்து பெற்றோர், 2 சகோதரர்கள், மைத்துனி அவர்களது 2 குழந்தைகள் ஆகியோருக்கு கொடுத்தார். அதன்பின்னர் காதலனை போன் செய்து வரவழைத்தார்.

மயக்கத்தில் இருந்த 10 மாத குழந்தை உள்பட ஷபனத்தின் குடும்பத்தினர் ஏழு பேரையும் இருவரும் சேர்ந்து இரும்புக்கம்பியால் அடித்து கொன்றனர்.கடந்த 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது. மொரதாபாத் போலீசார் விசாரணை நடத்தி ஷபனம் – சலீம் ஜோடியை கைது செய்தனர். அவர்கள் மீது செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அங்கு இருவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை அலகாபாத் ஐகோர்ட்டு உறுதி செய்து தீர்ப்பு அளித்தது.

தூக்கு தண்டனையை எதிர்த்து இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். இந்த மனு நேற்று தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, அருண் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஷபனம், சலீம் ஜோடிக்கு கீழ்கோர்ட்டு விதித்த தூக்கு தண்டனையை நீதிபதிகள் உறுதி செய்தனர். கடந்த 10 ஆண்டுகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3ஆது பெண் ஷபனம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply