குஜராத்துக்கு மட்டும் எளிமையான கேள்விகளா? கொந்தளிக்கும் நீட் தேர்வு விவகாரம்
நீட் தேர்வில் எந்தவித முறைகேடுகளும் நடக்கக்கூடாது என்பதற்காக மாணவர்களை தீவிரவாதிகளை போல அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் தற்போது நீட் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக மருத்துவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சமூக சமத்துவ மருத்துவர்கள் சங்கம் நிர்வாகி ரவீந்திரநாத் கூறும் போது, ” தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை, முதுநிலை, உயர்சிறப்பு மருத்துவ கல்வி இடங்களுக்கு நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
நீட் தேர்வு தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 2 மசோதாக்ளுக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது.
குஜராத்திலும் மேற்கு வங்கத்திலும் வெவ்வேறு கேள்வித்தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. குஜராத்தில் எளிமையாகவும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடினமாகவும் கேள்விகள் அமைந்துள்ளன. 180 வினாக்களும் ஒன்றாக இருக்கும் வகையில் வினாத்தாளை அமைத்து மறுதேர்வை அனைத்து மொழிகளிலும் நட