சீசுவான் உருளைக்கிழங்கு மஞ்சூரியன்

download

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 2

சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்

மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சூரியன் செய்வதற்கு…

எண்ணெய் – 3 டீஸ்பூன்

பூண்டு – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1/2 (பொடியாக நறுக்கியது)

பெரிய வெங்காயம் – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

குடைமிளகாய் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)

சோயா சாஸ் – 1/4 டீஸ்பூன்

தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்

சீசுவான் சாஸ் – 1 டீஸ்பூன்

சோள மாவு – 1/2 டீஸ்பூன் (2 டேபிள் ஸ்பூன் நீருடன் கலந்து கொள்ளவும்)

உப்பு – தேவையான அளவு

ஸ்பிரிங் ஆனியன் – சிறிது (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை நன்கு கழுவி, தோலுரித்து, நீளமாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் உருளைக்கிழங்கு, சோள மாவு, மிளகுத் தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருளைக்கிழங்கை போட்டு, பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு சேர்த்து வதக்கி, பின் வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். பிறகு அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், சீசுவான் சாஸ் சேர்த்து நன்கு கிளறி, பின் சிறிது தண்ணீர் மற்றும் சோள மாவு கலவையை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து ஓரளவு கெட்டியான பதத்தில் கிளறி விட வேண்டும். அடுத்து அதில் உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு பிரட்டி, மேலே ஸ்பிரிங் ஆனியன் தூவி கிளறி இறக்கினால், சீசுவான் உருளைக்கிழங்கு மஞ்சூரியன் ரெடி!!!

Leave a Reply