இளநிலை பட்டப்படிப்பு முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு உத்திரப்பிரதேச அரசின் சாத்ரா கல்யாண் திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
கல்வித் தகுதி:
இளங்கலை பட்டப்படிப்பு / முதுகலை பட்டப்படிப்பு : முந்தைய வகுப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
பி.எச்டி., : முதுகலை பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். காலம்: ஒரு ஆண்டு
மதிப்பு:
விவசாயம் மற்றும் பொதுப்பிரிவு இளநிலை பட்டம்: 2,400 ரூபாய்
தொழில்நுட்பம்/மருத்துவம் இளநிலை பட்டம்: 3,600 ரூபாய்
விவசாயம் மற்றும் பொதுப்பிரிவு முதுநிலை பட்டம்: 3,000 ரூபாய்
தொழில்நுட்பம்/மருத்துவம் முதுநிலை பட்டம்: 4,800 ரூபாய்
பி.எச்டி.,:
வகுப்பு ஏ: ஆறாயிரம் ரூபாய்
வகுப்பு பி: எட்டாயிரம் ரூபாய்
வகுப்பு சி: பத்தாயிரம் ரூபாய்
வகுப்பு டி: 12 ஆயிரம் ரூபாய்
இதர தகுதிகள்:
இளங்கலை பட்டம் / முதுகலை பட்டம்: பெற்றோர் / பாதுகாவலரின் வருட வருமானம் ஆண்டுக்கு ரூ.75,000/- க்கு குறைவாக இருக்க வேண்டும்.
பி.எச்டி.,: பெற்றோர் / பாதுகாவலரின் வருட வருமானம் ஆண்டுக்கு ரூ.75,000/-க்கு குறைவாக இருக்க வேண்டும்.
உதவித் தொகை விபரம்:
உதவித் தொகை எண்ணிக்கை : தகுதி அளவைப் பொறுத்தது
கால அளவு: ஒரு ஆண்டு
வழங்கப்படும் தொகை: பட்டப்படிப்பு படிப்போருக்கு : விவசாயம் மற்றும் பொதுப்பாடப் பிரிவு மாணவர்களுக்கு ரூ.2400/-
பட்டதாரிகளுக்கு: தொழில்நுட்பம் / மருத்துவம் ரூ.3600/-
முதுகலை பட்டம் படிப்பவர்களுக்கு : விவசாயம் மற்றும் பொது பாடப்பிரிவு ரூ.3000/-
முதுகலை பட்டம்: தொழில் நுட்பம் / மருத்துவ படிப்புகளுக்கு ரூ.4800/-பி.எச்டி., படிப்போருக்கு: * பிரிவு ஏ ரூ.6000, * பிரிவு பி ரூ.8000 * பிரிவு சி ரூ.10,000/- * பிரிவு டி ரூ.12,000/-
விண்ணப்ப நடைமுறைகள்:
பிரிவு ஏ:
இந்தி, உருது, அரபி, பெர்சியன், வரலாறு,தத்துவம், அரசியல் அறிவியல், சமூக அறிவியல், ஹோம் சயின்ஸ், இசை, இதழியல், சமூக சேவை.
பிரிவு பி:
பொருளாதாரம், வர்த்தகம், மனித அறிவியல், கல்வி, ராணுவம், <உளவியல், மொழியியல், பழைமையான வரலாறு, தொல்பொருள் ஆய்வியல்
பிரிவு சி:
புவியியல், ரசாயனம், இயற்பியல், உயிரியல், தாவரவியல், விவசாயம், மருத்துவம், பொறியியல், கணிதம், புள்ளியியல், டிராயிங், ஓவியம், வனம் சுற்றுச் சூழல்.
பிரிவு டி:
பயோ கெமிஸ்ட்ரி, பயோ டெக்னாலஜி, பயோ இன்ஸ்ட்ரூமென்டேசன், பயோ மெட்ரிக்ஸ், மெட்டீரியல் சயின்ஸ், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, சுற்றுச் சூழல் மற்றும் எரிதி தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன்.
கல்வி உதவித் தொகை வழங்கும் நிறுவனம்:
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், அலகாபாத்.
Scholarship : | பட்டப்படிப்பு படிக்கும் ஏழை மாணவர்களுக்கான உதவித்தொகை |
Course : | பி. இ., பி.டெக்.,பி.டிசைன். பி.பார்ம்., |
Provider Address : | INDIAN INSTITUTE OF INFORMATION TECHNOLOGY, ALLAHABAD, The Director, IIIT- Allahabad (IIIT-A), Deoghat Jhalwa, Allahabad 211 011 (UP), Tel:0532-2431684, 2552380, Fax: 0532-2430006, E-Mail: contact@iiita.ac.in, www.iiita.ac.in, |
Description : |