ஒற்றைப் பெண் குழந்தைக்கு கல்வி உதவித்தொகை: யுஜிசி அறிவிப்பு

ugc1

சுவாமி விவேகானந்தா ஒற்றைப் பெண் குழந்தைக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தை யுஜிசி அறிமுகப்படுத்தியுள்ளது.

சமூக அறிவியல் மற்றும் அறிவியலில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் பெண்களுக்கு இந்த உதவித்தொகை அறிவித்துள்ளது.

கல்வி கொள்கையின் முக்கிய குறிக்கோளாக பெண்கள் கல்வி மேம்பாடு விளங்குகிறது. சமூகத்தில் பெண்களுக்கு சமஉரிமை வழங்க வேண்டியது அவசியமாகும். அந்தவகையில் குடும்பத்தில் ஒற்றைப் பெண் குழந்தைக்கான சிறப்பு சலுகையை இந்திய அரசு வழங்கி வருகின்றது.

அங்கிகாரம் பெற்ற பல்கலை, கல்லூரி, கல்வி நிறுவனங்களில் சமூக அறிவியல் மற்றும் அறிவியலில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவிகள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ.8 ஆயிரமும், மூன்று மற்றும் நான்காம் ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். சூழ்நிலை அடிப்படையில் ஐந்தாம் ஆண்டும் உதவித்தொகை நீட்டிக்கப்படும்.

இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பவர் குடும்பத்தில் ஒரு பெண் குழந்தையாக இருக்க வேண்டும். முழுநேர படிப்பை மேற்கொள்பவராக இருக்க வேண்டும். நவ.,31ம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க கடைசி தேதியாகும்.

கூடுதல் தகவல்களுக்கு யுஜிசி இணையதளத்தை அணுகலாம்.

Leave a Reply