மார்ச் 31 வரை பள்ளி, கல்லூரி திரையரங்குகள் மூடல்: முதலமைச்சர் அறிவிப்பு

மார்ச் 31 வரை பள்ளி, கல்லூரி திரையரங்குகள் மூடல்: முதலமைச்சர் அறிவிப்பு

மார்ச் 31ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் மூடப்படும் என டெலி முதல்வர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் எதிரொலியாக கேரளாவில் ஒன்றாம் வகுப்பு முதல் 7ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மார்ச் மாதம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கேரளாவை தொடர்ந்து டெல்லியிலும் அதே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் சற்றுமுன் டெல்லியில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் மார்ச் 31க்கு பின்னர் கொரோனா பாதிப்பின் நிலவரத்தை பொறுத்து அடுத்த அறிவிப்பு வரும் என்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Leave a Reply