சிரியா பள்ளியின் மீது குண்டு மழை. 22 மாணவர்கள் பரிதாப பலி
[carousel ids=”96421,96420,96419,96418,96417″]
சிரியாவின் பெரும்பகுதி ஐ.எஸ்.தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது சிரிய அதிபர் ஆசாத் தலைமையிலான அரசு படைகள் மற்றும் ரஷியாவின் படைகள் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் நேற்று ஐ.எஸ்.தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் என்ற பகுதியில் இருந்த பள்ளி ஒன்றின் மீது ரஷ்ய படைகள் அதிரடி தாக்குதல் நடத்தி குண்டுமழை பொழிந்ததாகவும் இந்த தாக்குதலில் அப்பாவி பள்ளி குழந்தைகள் 22 பேர் பலியாகியுள்ளதாகவும் அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதுமட்டுமின்றி அந்த பள்ளி முற்றிலும் சிதிலமடைந்துவிட்டதால் பள்ளி குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள யுனிசெப்பின் இயக்குநர் அந்தோனி லேக், இது ஒரு போர்க்குற்றம் என்றும், மிகக் கொடூரமான செயல்பாடு என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.