முதல்வர் உடல்நிலை எதிரொலி. பள்ளி, கல்லூரிகள் விடுமுறையா?

முதல்வர் உடல்நிலை எதிரொலி. பள்ளி, கல்லூரிகள் விடுமுறையா?

starting-schoolதமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை முதல் உடல்நிலை சீரற்ற நிலையில் இருப்பதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.நேற்று இரவே சில சமூக விரோதிகள் ஒரு லிட்டர் பால் ரூ.200க்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று பள்ளி ,கல்லூரிகள் விடுமுறை என்று வாட்ஸ் அப்பில் செய்தி பரவி வருகிறது. ஆனால் இந்த தகவலை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் மறுத்துள்ளார். இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும், இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Leave a Reply