ஷூமேக்கரின் மனைவி பத்திரிகையாளர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்

பார்முலா 1 கார் பந்தயத்தில் ஏழு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மைக்கேல் ஷூமேக்கர் டிசம்பர் 29ஆம் தேதி பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது பனிப்பாறை ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானார். அதுமுதல் இன்று வரை அவர் கோமா நிலையில்தான் இருக்கிறார். அவரது உயிரை காப்பாற்றவும், கோமா நிலையில் இருந்து அவரை மீட்டெடுக்கவும் மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து செய்தி சேகரிக்க உலகம் முழுவதும் இருந்து பத்திரிகை நிருபர்கள் மருத்துவமனை முன்பு குவிந்து வருவதால் சிகிச்சை அளிக்க வரும் மருத்துவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவெ இதுகுறித்து ஷூமேக்கரின் மனைவி கோரினோ அவர்கள் இன்று ஒரு உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எனது கணவரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வரும் இந்த இக்கட்டான நிலையில் செய்தி சேகரிக்க வரும் நிருபர்களால் நிர்வாக நெருக்கடியும், இடைஞ்சல்களும் ஏற்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன. எனவே தயவுசெய்து நிருபர்கள் மருத்துவமனை வளாகத்தில் இருந்து வெளியேறி எனது கணவருக்கு தங்கு தடையில்லாத மருத்துவம் கிடைக்க ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்வதோடு எங்கள் குடும்பத்தினர்களை அமைதியுடன் இருக்க தனிமையில் எங்களை விட்டுவிட்டு செல்லுமாறும் கேட்டுக்கொள்கிறேன்” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவரது உருக்கமான அறிக்கைக்கு பின்னர் செய்தியாளர்கள் வெளியேறி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Leave a Reply