சென்னை பிர்லா கோளரங்கத்தில் அறிவியல் கண்காட்சி. மாணவர்கள் குவிந்தனர்.

இம்மாதம் 28ஆம் தேதி நாடு முழுவதும் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது.  இதனையொட்டி சென்னை பிர்லா கோளரங்கத்தில் அறிவியல் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

நாளை திங்கட்கிழமை  வரை நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் சென்னை மற்றும் சென்னையின் சுற்றுப்புறமுள்ள பள்ளி மாணவ- மாணவியர்களின் அறிவியல் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தண்ணீரின் அழுத்தத்தை பயன்படுத்தி ராக்கெட்டை ஏவுவது உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து கண்டுபிடிக்கப்பட்ட படைப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்த அறிவியல் கண்காட்சியை காண மாணவர்களும், பொதுமக்களும் கூட்டம் கூட்டமாக பிர்லா கோளரங்கத்தில் குவிந்துள்ளனர். இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் கூட்டம் அதிகம் வந்துள்ளதாக பிர்லா கோளரங்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

சென்னை பள்ளி மாணவர்களின் அறிவியல் திறனை வெளிக்கொணரும் வகையில் இந்த அறிவியல் கண்காட்சி நடத்தப்படுவதாக அறிவியல் கண்காட்சியின் அமைப்பாளர்கள் தெரிவித்தனர்..

Leave a Reply