அம்மை நோயை அழிக்க காரணமான மூத்த விஞ்ஞானி மரணம்.

அம்மை நோயை அழிக்க காரணமான மூத்த விஞ்ஞானி மரணம்.

smalla poxமனிதர்களை தாக்கும் கொடூர நோயான அம்மை நோக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து உலகில் பல நாடுகளில் அம்மை நோயே இல்லாதவாறு செய்ததற்கு காரணமான மூத்த விஞ்ஞானி டி.ஏ. ஹென்டர்சன் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 87

அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் புளூம்பர்க் சுகாதாரப் பள்ளி ஆகியவற்றின் ‘டீன்’ ஆக இருந்த டி.ஏ. ஹெண்டர்சன், இந்த இருநிறுவனங்களும் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோய்க்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து, தயாரிக்கும் ஆராய்ச்சிக்கான தனிப்பிரிவை உருவாக்கினார். உலகம் முழுவதும் பிறந்த குழந்தைகளுக்கு அம்மை தடுப்பூசி போடும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அரும்பங்காற்றி சுமார் பத்தாண்டுகளில் பரவலாக அம்மை நோயை இவர் கட்டுப்படுத்தினார்.

கடந்த 2001-ம் ஆண்டுவாக்கில் அமெரிக்காவை ‘ஆந்த்ராக்ஸ்’ என்ற கொடிய நோய்க்கிருமி தாக்கியபோது அந்நாட்டின் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான சிறப்பு முகாம் அலுவலகத்தின் தலைவராக முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இவரை நியமித்தார்.

அந்நாட்டின் மிக உயரிய விருதான அதிபரின் சுதந்திர விருதை கடந்த 2002-ம் ஆண்டில் பெற்றுள்ள ஹென்டர்சன், சமீபகாலமாக முதுமைசார்ந்த காரணங்களால் பாட்லிமோரில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை டி.ஏ. ஹென்டர்சன் மரணம் அடைந்ததாக அவரது குடும்பத்தினர் நேற்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply