ராஜஸ்தான் மாநிலம் பிலானியிலி செயல்பட்டு வரும் CSIR-Electronics Engineering Research மையத்தில் நிரப்பப்பட உள்ள சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 02/2015
பணி: Scientist/Senior Scientist
காலியிடங்கள்: 33
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100
வயதுவரம்பு: Scientist பணிக்கு 32க்குள் இருக்க வேண்டும். Senior Scientist பணிக்கு 37க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் எம்.இ, எம்.டெக், முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Principal Scientist
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.37,400 – 67,000
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் எம்.இ அல்லது எம்.டெக் அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை டி.டி.யாக செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி, அனுபவம், ஆராய்ச்சி கட்டுரைகள் போன்ற தகுதிகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Administrative Officer, CSIR-CENTRAL Electronics, Engineering Research Institute, Pilani, Rajasthan – 333031
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.ceeri.res.in/recr/2015/Advt_No_02_GrIV_Eng_27032015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.