சுத்தமான காற்று கிடைக்க புதிய கருவி. விஞ்ஞானிகள் முயற்சி.

pureair_2343131fசுத்தமான காற்று, குடிநீர் எல்லாம் எதிர்காலத்தில் மனிதனுக்கு சாத்தியமா என கேள்வி கேட்கும் அளவுக்கு சுற்றுச் சூழல் மாசடைந்து வருகிறது. அதை முறியடிக்கவும் விஞ்ஞானிகள் முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

எதிர்காலத்தில் சுத்தமான காற்றை உற்பத்தி செய்து கொடுக்கும் கருவியின் வடிவமைப்பை வெளியிட்டுள்ளது ஒரு நிறுவனம்.

இந்த கருவியைக் கொண்டு சுத்தமான காற்று உற்பத்தி செய்து கொள்வது மட்டுமல்ல, புவிப் பரப்பின் எந்த பகுதியில் உள்ளது போல காற்று வேண்டும் என்றாலும் தேர்வு செய்து கொள்ளலாம்.

அந்த பகுதியில் உள்ள தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப காற்றை உற்பத்தி செய்து கொடுக்கும்.

இந்த கருவியில் உள்ள தொடுதிரையில் கூகுள் எர்த் மேப் மூலம் இடத்தையும் தேர்வு செய்து கொள்ளலாம். அந்த இடத்தில் நிலவும் காற்றைப் போலவே உங்கள் வீட்டிலும் காற்றைக் கொடுக்கும்.

இதன் மூலம் நாம் அந்த இடத்துக்கு செல்லாமலேயே அங்கு இருப்பது போன்ற உணர்வைப் பெறலாம் என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply