சமீபத்தில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவியது தெரிந்ததே. தற்போது இந்தியாவில் அதைவிட அபாயகரமான மும்முறை உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
மும்முறை உருமாறிய கொரோனா வைரஸ் மிக வேகமாகத் தொற்றும் அபாயம் உள்ளது என்றும் எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.