அணு உலைகளில் இருந்து வெளியாகும் அணுக்கழிவை அழிப்பதற்காக பலகோடி ரூபாய் செலவு செய்து வரும் நிலையில் அணுக் கழிவுகளை உண்ணக்கூடிய பாக்டீரியாவை விஞ்ஞானிகள் கண்டறிந்து சாதனை செய்துள்ளனர். இதனால் அணு உலைகளில் இருந்து வெளிவரும் அணுக்கழிவால் இனி எவ்வித பிரச்சனையும் இருக்காது என கூறப்படுகிறது.
பூமிக்கு அடியில் வசிக்கும் இந்த அணுக்கழிவை உண்ணும் நுண்ணுயிரிகள் ஒற்றை உயிரணுவைக் கொண்டவை என்பது அறியப்பட்டுள்ளது. இந்த அரிய கண்டுபிடிப்பினால், அணு உலைகளிலிருந்து வெளியாகும் பேராபத்தை விளைவிக்கக் கூடிய அணுக்கழிவுகளை கணிசமான அளவு குறைந்த செலவில் அழிக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கழிவுகளை உண்ணும் பாக்டீரியாக்கள் ஏற்கெனவே கண்டறியப்பட்டிருந்தாலும், அணுக் கழிவுகளைக் கையாளும் பகுதிகளின் சூழலை இந்த பாக்டீரியாவால் மட்டுமே தாங்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.