இன்று ஒரேநாளில் எல்.ஐ.சி. பங்குகள் ரூ.14 வரை குறைந்ததால் ரூ.786.20-க்கு விற்பனையாகி வருகிறது. எல்ஐசி சந்தை மதிப்பு ரூ.5 லட்சம் கோடிக்கும் கீழ் சரிந்துள்ளது.
பங்கு ஒன்று ரூ.949 விலையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட எல்ஐசி பங்கின் விலை ரூ.163 வரை சரிந்துள்ளது.
இதன்மூலம் ரூ.6 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட எல்ஐசியின் தற்போதைய மதிப்பு ரூ.4,97,113 கோடியாக பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது.