மன்னார் வளைகுடா பகுதியில் திடீரென உள்வாங்கிய கடல். 30 படகுகள் சேதம்
கடந்த சில நாட்களாக மன்னார்வளைகுடா கடல் பிராந்திய பகுதியில் வழக்கத்திற்கு மாறாக வேகமான காற்றும் ராட்சத அலைகளும் உருவாகி வந்த நிலையில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மன்னார் வளைகுடா பகுதி அருகேயுள்ள சின்னப்பாலம் என்ற கடல் பகுதியில் திடீரென சுமார் 100 மீட்டர் தொலைவு கடல் உள்வாங்கியது. இதனால் கரையில் நிறுத்ப்பட்டிருந்த 30 க்கும் மேற்ப்பட்ட படகுகள் சேதமடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்களும் மிகுந்த சிரமத்துடன் கரை திரும்பினர். சுனாமிக்கு பின்னர் இந்த பகுதியில் அடிக்கடி கடலில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகவும், குறிப்பாக மழைக்காலங்களில் கடல் நீர் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்குள் உள்ளே புகுந்து வீடுகளையும் மீன்பிடி சாதனங்களையும் சேதப்டுத்தியும், திடீரென கடல் உள்வாங்கி படகுகளை சேதப்படுத்தியும் வருவதால் மீனவர்களுக்கு பாதுகாப்பான வீடுகள் கட்டித்தர அரசு ஆவன செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மீனவர்கள் தமிழக மற்றும் மத்திய அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.