சிமி இயக்கத்தினர் 7 பேர் தப்பி ஓட்டம்

உள்துறை அமைச்சகத்தால் தடை செய்யப்பட்ட இந்திய முஸ்லீம் மாணவர்கள் இயக்கத்தை சேர்ந்த சிலர், மத்திய பிரதேச மாநிலம் காந்த்வா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பலத்த பாதுகாப்பையும் மீறி அங்கிருந்த சிமி இயக்கத்தினர் 7 பேர் தப்பி ஓடினர். உடனடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதை அடுத்து ஒருவர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார்.

மற்ற 6 பேரையும் தேடும் பணியில் மத்திய பிரதேச போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கான்ப்பூருக்கு சென்றிருக்கலாம் என சந்தேகப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து காந்த்வா மற்றும் கான்ப்பூர் நகரங்களில் வாகனம் மற்றும் ரயில்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு சில வாரத்திற்கு முன் மும்பை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட இந்திய முஜாகீதின் இயக்கத்தின் தீவிரவாதி சைத் உஸ்மானி தப்பி ஓடினான்.

இதுவரை அவன் போலீஸ் பிடியில் சிக்கவில்லை. இந்நிலையில், சிமி இயக்கத்தினர் 7 பேர் சிறையிலிருந்து தப்பி ஓடியது பாதுகாப்புத் துறை வட்டாரங்களில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply