காணாமல் போன மலேசிய விமானத்தின் கருப்புப்பெட்டியின் ஆயுட்காலம் இன்றுடன் முடிகிறது. இன்று மாலைக்குள் கருப்புப்பெட்டியை மீட்காவிட்டால், அதன்பிறகு அதை எடுத்தாலும் எவ்வித பயனும் இருக்காது. எனவே சீன மற்றும் பிரிட்டன் மீட்புக்குழுக்கள் இறுதிக்கட்ட முயற்சியாக கருப்புப்பெட்டியை மீட்க தீவிர காட்டி வருகின்றன.
தெற்கு ஆஸ்திரேலியாவில் இந்திய பெருங்கடலில் பெர்த் நகரத்தில் இருந்து 1000 கி.மீ தொலைவில் உள்ள கடற்பகுதியில் கருப்புப்பெட்டியின் சிக்னல் கிடைத்ததாக கடந்த சனிக்கிழமை சீனக்கப்பல் அதிகாரிகள் கூறினர். பின்னர் நேற்று மீண்டும் இரண்டு சிக்னல்கள் கருப்புப்பெட்டியிடம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கருப்புப்பெட்டியினை மீட்க பிரிட்டனில் இருந்து அதிநவீன மீட்புக்கப்பல் ஒன்று சிக்னல் கிடைத்த இடத்தை அடைந்துவிட்டது. இன்று மாலைக்குள் கருப்புப்பெட்டியை மீட்க தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கருப்புப்பெட்டியின் சிக்ன 5.6 மைல்கள் ஆழத்தில் இருந்து வெளிவந்துள்ளதால் இன்று மாலைக்குள் மீட்பது கடினம் என்றே கருதப்படுகிறது.
கருப்புப்பெட்டியில் இருந்து சிக்னல் வெளிவந்ததை முதன்முதலாக ஆஸ்திரேலிய அரசும் உறுதி செய்துள்ளது. Australian Air Chief Marshall Angus Houston அவர்கள் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது “கடலின் ஆழத்தில் இருந்து சிக்னல் பதிவு செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், மூன்றாவது சிக்னலை பதிவு செய்யும்போது ஆஸ்திரேலிய அதிகாரிகளும் உடன் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.