ரிலையன்ஸ் உள்பட 13 நிறுவனங்கள் பங்குவர்த்தகத்தில் ஈடுபட தடை. செபி உத்தரவு

ரிலையன்ஸ் உள்பட 13 நிறுவனங்கள் பங்குவர்த்தகத்தில் ஈடுபட தடை. செபி உத்தரவு

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகிய ரிலையன்ஸ் நிறுவனம் ஓராண்டு பங்கு வர்த்தகத்தில் ஈடுபட செபி தடை விதித்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்துடன் மேலும் 12 நிறுவனங்களுக்கும் செபி தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ரிலையன்ஸ் நிறுவனம் பங்கு வர்த்தகத்தில் நேரடியாக அல்லது மறைமுகமாக ஒரு வருடம் ஈடுபட கூடாது என்றும் அதுமட்டுமின்றி இந்நிறுவனம் 45 தினங்களுக்குள் ரூ.447.47 கோடி டெபாசிட் செய்யவும் செபி உத்தரவிட்டுள்ளது.

மேலும் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.447.47 கோடிக்கு கடந்த 2007ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி முதல் 12% வட்டியும் அளிக்க வேண்டும் என செபியின் உத்தரவில் உள்ளது.

செபி தடை செய்யப்பட்ட 13 நிறுவனங்களின் பெயர்கள் பின்வருமாறு:

1. Reliance Industries Ltd.

2. Gujarat Petcoke and Petro Product supply Pvt. Ltd.

3. Aarthik Commercials Pvt. Limited.

4. LPG Infrastructure India Pvt. Limited.

5. Relpol Plastic Products Pvt. Limited.

6. Fine Tech Commercials Pvt. Limited. (

7. Pipeline Infrastructure India Pvt. Limited.

8. Motech software Pvt. Limited.

9. Darshan Securities Pvt. Limited.

10. Relogistics (India) Pvt. Limited.

11. Relogistics (Rajasthan) Pvt. Limited.

12. Vinamara Universal Traders Pvt. Limited.

13. Dharti Investment and Holdings Pvt. Limited.

Leave a Reply