2வது அலையா என அச்சம்
சீனாவில் வூகான் மாகாணத்தில் ஆரம்பித்த கொரோனா, தற்போது அந்நாட்டில் கட்டுக்குள் உள்ள நிலையில் மீண்டும் அந்நாட்டில் 2வது அலை தோன்றியுள்ளதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சீன தலைநகர் பீஜிங்கில் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 52 வயதான அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது
அவருக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது என்றும், சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடன் அவருக்கு எந்தவித தொடர்பும் அவருக்கு இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனவே பீஜிங்கில் இரண்டு மாதங்களுக்கு பிறகு ஒருவருக்கு தொற்று உறுதியானதால், இரண்டாம் அலை தொடங்கி விட்டதோ என்ற அச்சம் மருத்துவர்களுக்கு எழுந்துள்ளது.