மலேசிய விமானம் மாயமான 2-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி. கண்ணீருடன் உறவினர்கள்

மலேசிய விமானம் மாயமான 2-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி. கண்ணீருடன் உறவினர்கள்
MH370
மார்ச் மாதம் 8ஆம் தேதியாகிய நேற்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் மலேசிய விமானம் MH 370 மாயமான நாளும் அனுசரிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் கதி என்ன என்பது இதுவரை புரியாத மர்மமாக உள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நகரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங் நகருக்கு 239 பேருடன் கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH 370  என்ற போயிங் 777 ரக விமானம் நடுவானில் திடீரென மாயமானது. மாயமான இந்த விமானத்தை கண்டுபிடிக்க உலக நாடுகளின் உதவிகளோடு பல மாதங்கள் தேடுதல் வேட்டை நடத்தியும் விமானம் குறித்து எவ்வித தகவல்களும் கிடைக்காததால் இந்த விமானத்தில் பயணம் 239 பேரும் பலியாகி விட்டதாக கருதுவதாக மலேசிய அரசு கடந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் அறிவித்தது. இந்திய பெருங்கடல் பகுதியில் விமானம் விபத்துக்குள்ளனதாகவும் நம்பப்படுகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சீனாவை சேர்ந்தவர்கள். எம்.எச். 370 விபத்தில் தங்கள் உறவினர்களை இழந்தவர்கள், நேற்று சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள லாமா கோவிலில் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினார்கள். கையில் ஊதுவத்திகள் ஏந்தியப்படி கண்ணீர் சிந்திய காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply