சாகித்ய விருதுகளை திருப்பி அளிப்பவர்களுக்கு மதச்சார்பின்மை நோய். ஆர்.எஸ்.எஸ்

சாகித்ய விருதுகளை திருப்பி அளிப்பவர்களுக்கு மதச்சார்பின்மை நோய். ஆர்.எஸ்.எஸ்
awards
சாகித்ய அகாடமி விருது பெற்றவர்கள் தாங்கள் பெற்ற விருதுகளை திருப்பி அளித்து வருவது குறித்து, ‘கருத்துரிமை இல்லை என்று நினைப்பவர்கள் எழுதுவதை நிறுத்திவிடலாம் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா கூறியதால் ஏற்பட்ட பரபரப்பே இன்னும் நீங்காத நிலையில், மதச்சார்பின்மை என்னும் நோயால் பாதிக்கப்பட்ட எழுத்தாளர்களே விருதுகளை திரும்ப அளிப்பதாக ஆர்.எஸ்.எஸ். தெரிவித்துள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.

மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக கொலை, மற்றும் மத சம்பந்தமான கருத்துக்களை தெரிவித்த போல்கர், பன்சாரே, கல்புர்கி ஆகிய சிந்தனையாளர்கள், பகுத்தறிவாளர்கள் படுகொலை ஆகியவற்றை கண்டித்தும் கருத்து சுதந்திரத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் எதிரான தொடர் அச்சுறுத்தல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சாகித்ய அகாடமி விருது பெற்ற நயந்தாரா சேகல் முதல் மொத்தம் 23 எழுத்தாளர்கள் தங்கள் சாகித்ய விருதுகளை சாகித்ய அகாடமிக்கு திருப்பியளித்துள்ளனர்.

இந்நிலையில், விருதை திருப்பி அனுப்பும் இவர்களுக்கெல்லாம் மதச்சார்பின்மை என்னும் நோய் பிடித்துள்ளதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அதன் ‘பஞ்சன்யா’ பத்திரிக்கையின் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும், இந்த பேனா கலைஞர்கள் அனைவரும் நமது இந்து ராஜ்ஜியத்திற்கு மட்டுமே எதிரானவர்கள் என்றும் குறிப்பிட்டு உள்ளது.

Leave a Reply