அமெரிக்க அரசின் முக்கிய பதவிக்கு இந்திய பெண்ணை தேர்வு செய்த டிரம்ப்
சமீபத்தில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் இந்தியர்களின் வேலைவாய்ப்பை பறிப்பதாகவும், இந்தியர்களை அமெரிக்காவில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த நிக்கி ஹாலே என்பவர் டிரம்ப் அவையில் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி அமெரிக்க அரசில் முக்கிய பதவிக்கு இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
அமெரிக்க சுகாதாரத் துறையின் தலைவராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீமா வர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 130 மில்லியன் அமெரிக்கர்களின் காப்பீடுகளை பராமரித்து வரும் முக்கிய பொறுப்பிர்கு தலைமை பொறுப்பிற்கு சீமாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
சிமாவின் நியமனம் சரியான தேர்வு என்றும் டிரம்ப் எடுத்துள்ள மிகச்சிறந்த முடிவுகளில் இதுவும் ஒன்று என்ரும் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின் போது துணை அதிபர் மைக் பினேஸ் கருத்து தெரிவித்தார்.