வைகோவும் சீமானும் அரை மாவோயிஸ்டுகள்: எச்.ராசா ஆவேசம்
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அவ்வப்போது ஆவேசமான கருத்துக்களை தனது பேட்டியிலும், சமூகவலைத்தளங்களிலும் பதிவு செய்வதுண்டு. அந்த வகையில் அவர் பலமுறை விமர்சனம் செய்யப்பட்டதோடு, வழக்குகளிலும் சிக்கியுள்ளார்.
இந்த நிலையில் வைகோ மற்றும் சீமான் குறித்து இன்று அவர் கூறியபோது, ‘அரை மாவோஸ்ட்டுகளான வைகோ , சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் சேலம் முதல் சென்னை வரை உள்ள கிராமங்களில் நக்சலைட்டுக்கள் நிறைந்துள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்
எச்.ராசாவின் இந்த கருத்து வழக்கம்போல் சர்ச்சைக்குள்ளாகி வருகிறத். மதிமுக மற்றும் நாம் தமிழர் தொண்டர்கள் எச்.ராசாவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.