கத்தி படத்தின் தயாரிப்பாளர் குறித்து விரிவான விளக்கத்தை ஏ.ஆர்.முருகதாஸ் என்னிடம் கூறியுள்ளார். இந்த படத்தின் தயாரிப்பாளருக்கும், ஈழத்தமிழர்களின் எதிரிகளுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என அவர் ஆதாரபூர்வமாக தெரிவித்துள்ளதால் அவருடைய விளக்கத்தை ஏற்றுக் கொண்டுள்ளேன். எனவே கத்தி படத்தை நாம் தமிழர் கட்சி எதிர்க்காது என சீமான் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் இந்த படத்திற்கு எதிராக மாணவர்கள் அமைப்பு போராடுவது தேவையில்லாதது என்றும் கத்தி படத்தின் தயாரிப்பாளர்களுக்கும், ராஜபக்சேவுக்கும் தொடர்பு இருந்தால் கண்டிப்பாக எனக்கு தகவல் வந்துவிடும். ஆனால் இதுவரை எவ்வித தகவல்களும் எனக்கு வரவில்லை என்பதால் கத்தி படத்தை எதிர்க்கும் எண்ணம் இல்லை. ஒருவேளை இனிமேல் ஏதாவது ஆதாரபூர்வமான தகவல்கள் வந்தால் கண்டிப்பாக எதிர்ப்பு தெரிவிப்போம் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து மாணவர் அமைப்பு செயலாளர் ஒருவர் கூறும்போது, ‘சீமான் அவர்கள் எங்களை போராடக்கூடாது என்று சொல்வதற்கு எவ்வித உரிமையும் இல்லை. அவரை போல நாங்கள் கத்தி படக்குழுவினர்களிடம் நாங்கள் விலைபோக மாட்டோம்’ என்று கூறியுள்ளார்.
மேலும் விஜய்யை வைத்து சீமான் பகலவன் என்ற படத்தை எடு\ப்பதாக இருந்து, பின்னர் அந்த படம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது பகலவன் படத்திற்கு கால்ஷீட் கொடுத்தால் கத்தி படத்தின் பிரச்சனையை கண்டுகொள்ள மாட்டோம் என்ற ரகசிய ஒப்பந்தத்தால், சீமான் கத்தி படம் குறித்து எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என ஃபேஸ்புக்கில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கின்றது என்பது தெரியவில்லை.