விஜய் நாம் தமிழர் கட்சியில் சேர வேண்டும். சீமான் அழைப்பு.

seeman and vijayநாம் தமிழர் கட்சியில் சேர்ந்து விஜய் அரசியல் பணியாற்ற வேண்டும் என சீமான் அழைப்பு விடுத்துள்ளார்.

லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொலை செய்த போர்க்குற்றவாளி ராஜபக்சேவின் நெருங்கிய நண்பரின் நிறுவனம் என்று கூறப்படும் லைகா நிறுவனம் தயாரிக்கும் ‘கத்தி’ படத்தில் விஜய் நடிக்கின்றார். இந்த படத்திற்கு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தான் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கபோவதில்லை என்று கூறியுள்ள நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான், தனது கட்சியில் சேர்ந்து விஜய் அரசியல் பணியாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் லைகா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை சீமான் இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. இதனால் ஈழத்தமிழர்களுக்காக போராடி வருவதாக கூறும் சீமானின் முகத்திரை கிழிந்துள்ளதாக சமூக இணையதளங்களில் சீமான் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

மேலும் தமிழகத்தை ஒரு தமிழன் மட்டுமே ஆளவேண்டும் என்று கூறிவரும் சீமான், விஜய் போன்ற இளையதலைமுறையினர் அரசியலுக்கு வந்தால்தான் தமிழகத்தை வேறு மாநிலத்தவர்களிடம் இருந்து காப்பாற்ற முடியும் என்று கூறியுள்ளார். ஆனால் விஜய் என்ன முடிவெடுப்பார் என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார் சீமான்.

இதன் காரணமாக விஜய் கூடியவிரைவில் தீவிர அரசியலில் குதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply