ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா மாநிலம் மற்றும் சீமாந்திர மாநிலம் என விரைவில் முறையாக பிரிக்கப்பட உள்ளது. இதற்கு ஜனாதிபதி அனுமதி அளித்ததையொட்டி மாநில பிரிவினைக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது.
இதனிடையே இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தெலுங்கானா தலைவர் சந்திரசேகர ராவ் “தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இங்குள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்ற முடியும். சீமாந்திராவை சேர்ந்தவர்கள் உடனே அங்கு சென்று விட வேண்டும். இல்லாவிட்டால் கட்டாயப்படுத்தி அனுப்பிவிடுவோம் என்று பேசியுள்ளார்.
மேலும் தெலுங்கானா தனி மாநிலம்உதயமானதும் சீமாந்திராவுக்கு எங்கள் பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க மாட்டோம்., எங்கள் தேவைக்கு போக மீதியிருந்தால் தண்ணீர் கொடுப்பது குறித்து பரிசீலனை செய்வோம் என்று பேசியுள்ளார்.
இவருடைய பேச்சால் ஆந்திராவில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் பெரிய கலவரம் ஆரம்பமாகும் சூழல் அங்கு நிலவுகிறது.