அதிரடி பேட்ஸ்மேன் சேவாக் ஓய்வா?

அதிரடி பேட்ஸ்மேன் சேவாக் ஓய்வா?
sewag
இந்திய கிரிக்கெட் வீரர்களில் அதிரடி பேட்ஸ்மேனாக விளங்கிய சேவாக் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வந்த சேவாக், ஐ.பி.எல் மற்றும் ரஞ்சித் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். இந்நிலையில் துபாயில் நேற்று நடந்த மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் போட்டி அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தனது ஓய்வு முடிவை அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சேவாக், ‘துபாயில் அடுத்த ஆண்டு (2016) நடைபெறும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாட இருக்கிறேன். சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றால் தான் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாட முடியும். எனவே இந்தியா திரும்பியதும் எனது ஓய்வு முடிவை விரைவில் அறிவிப்பேன்’ என்று கூறினார்.

1999-ம் ஆண்டு மொகாலியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான அதிரடி பேட்ஸ்மேன் ஷேவாக் கடைசியாக 2013-ம் ஆண்டில் ஐதராபாத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன் பிறகு அவர் எந்த சர்வதேச போட்டிகளிலும் விளையாடவில்லை.

104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷேவாக் 23 சதம் உள்பட 8,586 ரன்னும், 251 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள அவர் 15 சதம் உள்பட 8,273 ரன்னும், 19 இருபது ஓவர் போட்டியில் விளையாடியுள்ள சேவாக், 394 ரன்னும் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டியில் இரட்டை சதமும், டெஸ்ட் போட்டியில் இரண்டு முறை முச்சதம் கண்டுள்ள ஒரே இந்திய வீரர் ஷேவாக் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply