நித்தியானந்தாவுக்கு 5 1/2 மணிநேரம் நடந்த ஆண்மை சோதனை.

nithyaநீதிமன்ற உத்தரவின் பேரில் 7 டாக்டர்கள் குழுவினர் நேற்று நித்யானந்தா சாமியாருக்கு ஆண்மை பரிசோதனை செய்தனர். இந்த சோதனை பெங்களூர் மருத்துவமனையில் சுமார் 5½ மணி நேரம் நடைபெற்றது.

பெங்களூர் அருகே பிடதியில் உள்ள தியான பீடத்தில் நித்யானந்தா சாமியார் மீது அவரது முன்னாள் பெண் சீடர் ஆர்த்திராவ் என்பவர் அவர் மீது கற்பழிப்பு புகாரை தொடர்ந்து நித்தியானந்தாவுக்கு ஆண்மை இந்த வழக்கு விசாரணை சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டது.

விசாரணையின்போது நித்யானந்தா கூறிய தகவல்களின் அடிப்படையில் சி.ஐ.டி. போலீசார் விடுத்த கோரிக்கையை ஏற்று அவருக்கு ஆண்மை பரிசோதனை செய்ய பெங்களூர் ராமநகர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

ஆண்மை சோதனை செய்வதை எதிர்த்து நித்யானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்துஆண்மை பரிசோதனைக்கு ஆஜராகும்படி உச்ச்நீதிமன்றம் கோர்ட்டு அவருக்கு உத்தரவிட்டது.

உச்ச்நீதிமன்றம்  உத்தரவுப்படி நித்தியானந்தாவிற்கு ஆண்மை பரிசோதனை நடத்த 8-ந் தேதி பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் காலை 9 மணிக்கு ஆஜராகும்படி சி.ஐ.டி. போலீசார் நித்யானந்தாவுக்கு நோட்டீசு அனுப்பினர். அதன்படி நித்யானந்தா சாமியார் நேற்று காலை 7.45 மணிக்கு விக்டோரியா மருத்துவமனைக்கு காரில் வந்தார். அவருடன் சீடர்களும் வந்தனர். காலை 8 மணிக்கு மருத்துவ பரிசோதனைகள் தொடங்கியது.

விக்டோரியா அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் துர்கண்ணா தலைமையில் யூரா நெப்ராலஜி இயக்குனர் டாக்டர் ரட்கல், மனநிலை மருத்துவ துறை தலைவர் டாக்டர் சந்திரசேகர், பொது மருத்துவ நிபுணர் டாக்டர் வீரண்ண கவுடா, கைனகாலஜி டாக்டர் வெங்கட், நெப்ரா ரேடியாலஜி துறை தலைவர் டாக்டர் ராமலிங்கையா, பேத்தாலஜி டாக்டர் சுஜாதா சித்தப்பா ஆகிய 7 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தினர்.

Leave a Reply