மகள்களுடன் செல்பி. உலக அளவில் டிரெண்ட் ஆனது மோடியின் அறிவிப்பு

மகள்களுடன் செல்பி. உலக அளவில் டிரெண்ட் ஆனது மோடியின் அறிவிப்பு

selfie 1பெண் குழந்தைகளின் மகத்துவத்தை அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு தந்தையும் தங்கள் பெண் குழந்தையுடன் செல்பி எடுத்து வெளியிட வேண்டும் என பாரத பிரதமரின் அன்பு கோரிக்கைக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

நேற்று பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் (மன் கி பாத்) என்ற தலைப்பில் வானொலியில் உரையாற்றினார். அதில், நாட்டில் பெண் குழந்தைகளின் விகிதம் குறைந்து வருவது கவலையளிப்பதாகவும், பெண் சிசுவைக் காப்பாற்ற அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

மேலும் அவர் தனது உரையில் கூறியதாவது: “நாட்டின் குறிப்பிட்ட 100 மாவட்டங்களில் பெண் குழந்தைகளின் விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது கவலை அளிக்கிறது. குறிப்பாக ஹரியாணா மாநிலத்தில் இந்த சமூக அவலம் அதிகமாக உள்ளது. எனவே பெண் சிசுவைக் காக்க நாட்டு மக்கள் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.

இதுதொடர்பாக பிரமாண்ட விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக, ஹரியாணாவில் உள்ள கிராமப் பஞ்சாயத்து ஒன்றில் மேற்கொண்ட பிரச்சார முயற்சி வரவேற்கத்தக்கது. அதைப் போலவே பெற்றோர்களாகிய நீங்களும் உங்கள் மகள்களுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்து #SelfieWithDaughter என்ற ஹேஷ்டேக் உடன் ட்விட்டரில் பகிருங்கள். அவற்றை நான் மகிழ்ச்சியுடன் ரீட்வீட் (பகிர்தல்) செய்வேன். எதிர்வரும் ரக்சா பந்தன் திருவிழாவுக்கு நமது சகோதரிகளின் நலன்களில் அக்கறை காட்டுவது அவசியம்” என்று பேசியுள்ளார்.

பிரதமரின் இந்த வானொலி உரை ஒலிபரப்பப்பட்ட ஒருசில மணி நேரங்களில் #SelfieWithDaughter என்ற ஹேஷ்டேக்கில் ஏராளமானோர் தங்கள் மகள்களுடன் புகைப்படங்களைப் பதிவு செய்தவண்ணாம் உள்ளனர். அவற்றில் பலவும் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு வருகிறது.

இதனால், இந்தப் பிரச்சார உத்திக்கு ட்விட்டரில் படுவேகமாக வரவேற்பு கிடைத்தது. நிமிடத்துக்கு 20-க்கும் மேற்பட்ட போஸ்டுகள் பகிரப்பட்டதன் விளைவாக, #SelfieWithDaughter என்ற ஹேஷ்டேக், இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் நீண்ட நேரம் நீடித்தது.

இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் டாப்பில் இருந்த இந்த ஹேஷ்டேக் மெலும் மேலும் வரவேற்பு பெற்று, உலக அளவிலான ட்ரெண்டிங்கிலும் நேற்று மாலை சிறப்பிடம் பெற்றதும் கவனிக்கத்தது.

Leave a Reply