ஜூலையில் செமஸ்டர் தேர்வு:

 யூஜிசி உத்தரவு

‘கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ஜூலையில் நடத்த யூஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கல்லூரி ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வுகளை ஜூலை மாதத்தில் நடத்தலாம் என்றும், முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வின்றி இன்டர்னல் மதிப்பெண்களை கொண்டு கிரேடு வழங்கலாம் என்றும் யூஜிசி தெரிவித்துள்ளது

முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களுக்கு தேர்வு இன்றி இன்டர்ணல் மதிப்பெண்களைக் கொண்டு கிரேடு வழங்கலாம் என்று அறிவித்து உள்ள யூஜிசி, கொரோனா நிலைமை சரியானால் ஜூலை மாதத்தில் தேர்வை நடத்தலாம் என்றும் இல்லையெனில் இன்டர்ணல் மதிப்பெண்கள் 50%, முந்தைய பருவ தேர்வு மதிப்பெண்கள் 50 சதவீதம் என எடுத்துக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது

பருவத்தேர்வு இல்லாத மாணவர்களுக்கு இன்டர்ணல் மதிப்பெண்களை 100% எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ள யுஜிசி, ஆகஸ்ட் மாதம் ஏற்கனவே பயிலும் மாணவர்களுக்கும் செப்டம்பரில் புதிதாக சேரும் மாணவர்களுக்கும் வகுப்புகளை தொடங்கலாம் என்று அறிவித்துள்ளது

மேலும் செய்முறை தேர்வுகள், ஆராய்ச்சி படிப்புக்கான செயல்பாடுகளை இணையவழி ஸ்கைப் மூலம் பாடங்களை நடத்தலாம் என்றும் மூன்று மணிநேர தேர்வுக்கு பதில் இரண்டு மணி நேரம் மட்டுமே தேர்வை நடத்தலாம் என்றும் யுஜிசி அறிவித்துள்ளது

மேலும் கலை அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தலாம் என்ற பரிந்துரை ஏற்கப்படவில்லை என்றும் யூஜிசி கூறியுள்ளது

Leave a Reply