ஐ.பி.எல் கிரிக்கெட். சென்னை, மும்பை, பெங்களூர், ராஜஸ்தான் அணிகள் அரையிறுதுக்கு தகுதி.

Pepsi IPL 2015 - M56 SRH v MIஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரின் நேற்றைய முக்கிய ஆட்டத்தில் 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் மும்பை அணி, ஐதராபாத் அணியை வெற்றி பெற்று அரையிறுதிக்கு நுழைந்துள்ளது.,

நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது,.மும்பை அணியின் பவுலிங்கிற்கு தாக்கு பிடிக்க முடியாத ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். இதனால் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது.

பின்னர் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடி மும்பை அணி எவ்வித சிரமமும் இன்றி மிக எளிதாக ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 13.5 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. நாளை நடைபெறவுள்ள முதல் அரையிறுதி போட்டியில் மும்பை அணி சென்னை அணியுடன் மோதவுள்ளது. அதேபோல நாளை மறுநாள் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இரண்டாவது அரையிறுதியில் மோதுகின்றது.

Leave a Reply