குறும்பதிவு சேவையான டிவிட்டர் யாருக்கு வேண்டுமானாலும் நேரடி மெசேஜ் அனுப்ப புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
140 எழுத்துக்களில் கருத்துக்களை பகிர உதவும் டிவிட்டரில் ரிடிவீட் செய்வது ,ஹாஷ்டேகை பயன்படுத்துவது உள்ளிட்ட பல வசதிகள் இருக்கின்றன.இவற்றோடு எந்த ஒரு டிவிட்டர் பயனாளிக்கும் நேரடி மெசேஜ் அனுப்பும் வசதியும் இருக்கிறது. மற்ற அனைவரும் பார்க்க கூடிய வகையில் டைம்லைனில் வராமல் ஒருவருடன் தனிப்பட்ட முறையில் கருத்து பரிமாற்றம் செய்ய விரும்பினால் நேரடி மெசேஜ் வசதியை பயன்படுத்தலாம்.
ஆனால் இதுவரை டிவிட்டரில் தாங்கள் பாலோ செய்யும் பயனாளிகளுக்கு மட்டுமே இப்படி நேரடி செய்தி அனுப்ப முடியும். இப்போதோ யாருக்கு வேண்டுமானாலும் நேரடி மெசேஜ் அனுப்பும் வசதியை டிவிட்டர் அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஒருவரை டிவிட்டரில் பாலோ செய்யாவிட்டாலும் கூட அவருக்கு நேரடி மேசேஜ் அனுப்பலாம்.
டிவிட்டரில் மெசேஜ் பகுதி சென்று புதிய மெசேஜை தேர்வு செய்து அதில் யாருக்கு செய்தி அனுப்ப வேண்டுமோ அவருடைய டிவிட்டர் முகவரியை குறிப்பிட்டு செய்தி அனுப்பலாம். இப்படி பலருக்கு குழு செய்தியை கூட அனுப்ப முடியும். இந்த செய்தியுடன் புகைப்படங்களையும் இணைக்கலாம். இந்த செய்திகளை டெலிட் செய்யும் வசதியும் இருக்கிறது.
இப்படி யாரிடம் இருந்தும் நேரடி செய்தி பெற விரும்பினால் பயனாளீகள் தங்கள் டிவிட்டர் பகுதிக்கு சென்று செட்டிங்கில் இதற்கான வசதியை செயல்படுத்த வேண்டும்.
இதே போல ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் செயலியிலும் நேரடி செய்திக்கான பட்டனை டிவிட்டர் இடம்பெற வைத்துள்ளது.
இணையத்தில் பேஸ்புக் மெச்ஞர் போன்ற மெசேஜிங் சேவைகள் பிரபலமாகி வரும் நிலையில் அவற்றுக்கு ஈடு கொடுக்கும் வகையில் டிவிட்டர் இந்த புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
நேரடி மெசேஜ் வசதி பற்றி விரிவான விளக்கத்திற்கு: https://support.twitter.com/articles/14606-about-direct-messages#