விடை பெற்றார் பான் கீ மூன். புதிய ஐ.நா பொதுச்செயலாளர் பதவியேற்பு

விடை பெற்றார் பான் கீ மூன். புதிய ஐ.நா பொதுச்செயலாளர் பதவியேற்பு

கடந்த பத்து ஆண்டுகளாக ஐ.நாவின் பொதுச்செயலாளராக இருந்த பான் கீ மூன், தனது பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து விடைபெற்றார். அவருக்கு சிறப்பான வழியனுப்பு விழா நடைபெற்றது. இந்நிலையில் புதிய ஐ.நா. பொதுச்செயலாளராக தேர்வு பெற்றுள்ள போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த ஆண்ட்ரினோ கட்டர்ஸ் விரைவில் பதவி ஏற்கிறார்.

நேற்று அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் பான்கீ மூனுக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஐ.நா பொதுச்செயலாளராக  கடந்த 10 ஆண்டுகளாக தான் செய்த பணிகளை நினைவு கூர்ந்தார். தற்போது தான் சின்ரெல்லா போன்று உணர்வதாகவும் நாளை (இன்று) நள்ளிரவு முதல் அனைத்தும் மாறப்போகிறது என்றும் நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.

பான்-கி-மூன் தென் கொரியாவை சேர்ந்தவர். இவர் ஐ.நா.சபையின் 8-வது பொதுச் செயலாளராக பதவி வகித்தார். கடந்த 2007 ஜனவரி முதல் 2016 டிசம்பர் வரை 10 ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளார்.

Leave a Reply