ஜெயலலிதா சொத்து வழக்கில் இருந்து ஆச்சார்யா நீக்கமா?
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீடு வழக்கின் விசாரனை சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆச்சார்யா நியமனம் செய்யப்பட்டிருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் கர்நாடக அரசு அறிவித்தது. இந்நிலையில் நேற்று மாலை ஆச்சர்யா நீக்கப்பட்டதாகவும் அவருக்கு பதிலாக வழக்கறிஞர் துஷ்யந்த் ஆர் தவே நியமனம் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
ஆனால் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கர்நாடக அரசு, இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆச்சார்யா நீடிப்பார் என்றும், இந்த வழக்கில் கூடுதல் வழக்கறிஞராக துஷ்யந்த் ஆர்.தவே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஆச்சார்யாவுடன் இணைந்து துஷ்யந்த் ஆர்.தவே செயல்படுவார் என்றும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
ஆச்சார்யாவை டம்மியாக்குவதற்காகவும், வழக்கின் வீரியத்தை குறைக்கவே கர்நாடக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.,