மூத்த குடிமக்களின் இலவச பயணத்திற்கு விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் எவை எவை?

மூத்த குடிமக்களின் இலவச பயணத்திற்கு விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் எவை எவை?
nis
சென்னை மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணம் இன்றி இலவசமாக பயணம் செய்யும் திட்டம் ஒன்றை முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த திட்டத்தின்படி பயன்பெறவுள்ள மூத்தகுடிமக்கள் அதற்கான விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து விண்ணப்பித்து மாதம் ஒன்று 10 டோக்கன்களை பெற்று இலவச பயணம் செய்யலாம்.

இந்த விண்ணப்பங்கள் அரசு போக்குவரத்து கழகத்தின் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தோ அல்லது மாநகர பேருந்து பணிமனைகளிலோ மூத்தகுடிமக்கள் பெற்றுக் கொள்ளலாம். இந்த விண்ணப்பங்கள் சென்னையில் மொத்தம் 42 இடங்களில் கிடைக்கும். இந்த விண்ணப்பங்கள் கிடைக்கும் 42 பணிமனைகளின் விபரம் பின்வருமாறு:

சென்ட்ரல் ரயில் நிலைய பேருந்து நிலையம், பிராட்வே, கிண்டி எஸ்டேட், கே.கே.நகர், மந்தைவெளி, வேளச்சேரி, சைதாப்பேட்டை, பல்லாவரம், தாம்பரம், தி.நகர், திருவான்மியூர், வடபழனி, அய்யப்பன்தாங்கல், வில்லிவாக்கம், அம்பத்தூர், அண்ணாநகர் மேற்கு, கோயம்பேடு, அயனாவரம், சுங்கச்சாவடி, அம்பத்தூர் ஓ.டி., பெரம்பூர், செங்குன்றம், எம்.கே.பி.நகர், ஆவடி, பூந்தமல்லி, வள்ளலார்நகர், திருவொற்றியூர் ஆகிய பேருந்து நிலையங்களிலும், மத்திய பணிமனை அடையாறு, வியாசர்பாடி, மாதவரம், பெரம்பூர், ஆலந்தூர், சைதாப்பேட்டை, ஆதம்பாக்கம், குரோம்பேட்டை–1, தாம்பரம் பணிமனை, தண்டையார்பேட்டை–1, பேசின்பாலம், எண்ணூர், பாடியநல்லூர், பெசன்ட்நகர் ஆகிய பணிமனை உள்பட 42 இடங்களில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கொடுத்து டோக்கன்களை பெற்று கொள்ளலாம்.

இந்த திட்டம் முதல்வரின் பிறந்த நாளான வரும் 24ஆம் தேதி அமல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்திற்கு மூத்த குடிமக்கள் இடையே பெரும் வரவெற்பை பெற்றுள்ளது.

Leave a Reply