ஜிஎஸ்டிக்கு பின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு
கடந்த 1ஆம் தேதி நள்ளிரவு 12மணிக்கு ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பின்னர் இன்றுதான் முதல் பங்குச் சந்தை வர்த்தகம் நிகழ்ந்தது. இதில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி உயர்ந்து காணப்பட்டதால் பங்குதாரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இன்று காலை நிலவரப்படி, 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 234 புள்ளிகள் அதிகரித்து 31,156 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிப்டி 29 புள்ளிகள் அதிகரித்து 9,587 புள்ளிகளாகவும் அதிகரித்து காணப்பட்டது. இன்றைய காலை வர்த்தகத்தில் ஐடிசி பங்குகள் 8 சதவீதம் அதிகரித்து இருந்தது. வங்கி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான பங்குகளின் மதிப்பு இறங்கியது.
ஹெச்யுஎல், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ் ஆகிவற்றின் பங்குகள் அதிகரித்தும், விப்ரோ, ஹெச்டிஎப்சி, ஹெச்சி எல் டெக்னாலஜிஸ், டிசிஎஸ், ரிலையன்ஸ் ஆகியவற்றின் பங்குகளின் மதிப்பு இன்றைய காலை வர்த்தக்கத்தில் இறங்கியும் காணப்பட்டது.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்து இருக்கும் நிலையில் சந்தையில் சில நாட்களுக்கு நிலையில்லா தன்மை காணப்படும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜிஎஸ்டி அமலுக்கு வந்த அன்றும் பங்குச் சந்தை உயர்ந்து காணப்பட்டது.