தேசிய அளவிலான போட்டிகளுக்கு சீயோன் பள்ளி மாணவர்கள் தகுதி

 தேசிய அளவிலான போட்டிகளுக்கு சீயோன் பள்ளி மாணவர்கள் தகுதி

schoolதேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். காமன்வெல்த் போட்டிகளுக்காக இந்தியப் பள்ளி விளையாட்டு ஒருங்கிணைப்பு அமைப்பின் சார்பில் சேலத்தில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச் சண்டைப் போட்டியில் சீயோன் பள்ளியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவன் பி.சூரியா வர்மா முதலிடத்தைப் பெற்று, தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம், தமிழகத்தின் சார்பில் தில்லியில் வரும் ஜனவரி 1ஆம் தேதி நடைபெற விருக்கும் தேசிய அளவிலான போட்டியில் அவர் பங்கேற்கிறார்.

 இதே பள்ளியில் பிளஸ்-1 பயிலும் மாணவி ஆர்.தனுஸ்ரீ தூத்துக்குடியில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான பாட்மிண்டன் போட்டியில் முதலிடம் பெற்றார். அவுரங்காபாத்தில் வரும் ஜனவரி 5-ஆம் தேதி நடைபெற இருக்கும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் தகுதியைப் பெற்று இருக்கும் ஆர்.தனுஸ்ரீ மற்றும் பி.சூரியா வர்மா ஆகிய இருவரையும் பள்ளித் தாளாளர் என்.விஜயன் பாராட்டினார்.
 

Leave a Reply