செரீனா டபுள்யு.டி.ஏ மகளிர் டென்னிஸ்-சாம்பியன் பட்டம் வென்றார்

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்த டபுள்யு.டி.ஏ மகளிர் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) சாம்பியன் பட்டம் வென்றார்.  பைனலில் சீனாவின் நா லியுடன் மோதிய செரீனா 2,6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் அதிரடியாக விளையாடிய அவர் 2,6, 6,3, 6,0 என்ற செட் கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றினார்.

நடப்பு சீசனில் அவர் பெறும் 11வது டபுள்யு.டி.ஏ பட்டம் இது. முன்னதாக மார்டினா ஹிங்கிஸ் 1997ல் 12 பட்டம் வென்றுள்ளார். இஸ்தான்புல் போட்டியில் 4வது முறையாக பட்டம், அதிக வயதில் இந்த கோப்பையை வென்ற வீராங்கனை (32 வயது, 1 மாதம்), ஒரே ஆண்டில் அதிக பரிசுத் தொகை வென்ற வீராங்கனை உட்பட பல்வேறு சாதனைகள் செரீனாவுக்கு சொந்தமாகி உள்ளன.

Leave a Reply